வடலி வெளியீடாக சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுதி ஆனந்த விகடன் பத்திரிகையின் 2010 விகடன் விருதுகளில் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதினை வென்றிருக்கிறது. யோ.கர்ணனுக்கு வாழ்த்துக்கள். விகடனுக்கு நன்றி. - தகவல்: Vadaly
========================================================================
துவக்கத்தில் கணையாழி கடைசிப் பக்க எஸ்.ஆர். கொடுத்து வந்தார். அப்புறம் கற்றதும் பெற்றதும் சுஜாதா கொடுத்தார். இப்பொழுது ஆனந்த விகடனே வழங்குகிறது. உயிர்மையும் ‘சுஜாதா விருது’ கொடுக்கிறது.அவற்றில் சில:
1. சிறந்த கதை - வசந்தபாலன் :: அங்காடித் தெரு
2. சிறந்த வசனம் - சற்குணம் :: களவாணி
3. சிறந்த சிறுகதைத் தொகுப்பு – தேவதைகளின் தீட்டுத்துணி :: யோ கர்ணன்
முள்ளிவாய்க்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற இறுதிப்போரின் காலகட்டம்
சிறந்த கவிதைத் தொகுப்பு – அதீதத்தின் ருசி :: மனுஷ்யபுத்திரன்
4. சிறந்த நாவல் - மில் :: ம காமுத்துரை (உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்த சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: வாஸந்தி)
5. சிறந்த கட்டுரைத் தொகுப்பு – கலாப்ரியா :: நினைவின் தாழ்வாரங்கள் (உயிர்மை சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: பிரபஞ்சன்)
6. சிறந்த சிற்றிதழ் (சிறு பத்திரிகை) – Dr.G.சிவராமன் :: பூவுலகு (சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: திலீப் குமார்)
7. சிறந்த மொழிபெயர்ப்பு - ரெட் சன் :: நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் – சுதீப் சக்கரவர்த்தி :: அ இந்திரா காந்தி – எதிர் வெளியீடு (RED SUN Travels in Naxalite Country By Sudeep Chakravarti – Penguin/Viking, Pages: 352; Price: Rs 495)
உலகத்தின் மிக வலுவான ஆயுதம் தாங்கிய தீவிர இடதுசாரி மக்கள் இயக்கம், மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இயங்கும் மாவோயிஸ்ட்டுகள்தான். அடர்ந்த காடுகளைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம், இந்தியாவைத் துண்டாடுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஓர் அரசைக் கொண்டுவருவதே. இந்தியாவில் புரட்சி என ஒன்று நடக்குமானால் அதற்குத் தலைமை ஏற்பது தண்டகாரண்யாதான். இவற்றை நேரடியாக தண்டகாரண்யா காடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவத்தின் மூலமாகக் கண்டறிந்து ‘ரெட் சன்’ என நூலாக எழுதி இருக்கிறார் பத்திரிகையாளர் சுதீப் சக்கரவர்த்தி.பத்திரிகையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்ட நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிகத் துல்லியமாக நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. “மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்னை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக, இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் இந்திய மாவோயிஸ்ட்கள்’ என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது. சமகாலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்னை பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.
8. சிறந்த வெளியீடு - தமிழினப் படுகொலைகள்: 1956-2008 :: மனிதம் வெளியீட்டாளர் (வலை | புத்தக பிடிஎஃப்)
9. சிறந்த பின்னணிப் பாடகர்: பென்னி தயாள் (ஓமணப் பெண்ணே – விண்ணைத் தாண்டி வருவாயா)
நன்றி: SnapJudge
No comments:
Post a Comment